
🩺 Thyroid பிரச்சனை இருந்தாலும் இயற்கையாக எடை கட்டுப்படுத்துவது எப்படி
ஏன் Thyroid பிரச்சனையை சரியாக பராமரிப்பது முக்கியம்?
நீங்கள் நீண்ட நாட்களாக thyroid மருந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் சோர்வாக, பலவீனமாக உணர்கிறீர்களா?
எடை அதிகரிப்பும், மாதவிடாய் மாறுபாடும் இருக்கிறதா?
ஒவ்வொருமுறை test செய்து doctor-க்கு போகும் போது, மருந்தை dose மட்டும் அதிகரித்து வருகிறதா?
அப்படியானால் மருந்துக்கு கூடுதலாக உங்கள் வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவை.
✅Step 1: மருந்தை நிறுத்த வேண்டாம்💊 — ஆனால் உடலை இயற்கையாக ஆதரிக்கத் தொடங்குங்கள்🌿
Thyroid மருந்தை திடீரென நிறுத்தக் கூடாது.
உங்கள் உடல் வெளியில் இருந்து மருந்தை மூலம் வரும் hormone-க்கு பழகி விட்டது.
அதற்குபதிலாக, மருந்துடன் சேர்ந்து வாழ்க்கை முறை மாற்றம்(lifestyle change) செய்யுங்கள்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை TSH level check செய்து doctor-உடன் கலந்துரையாடுங்கள்.
மெல்ல மெல்ல உடல் சீராக வரும்போது, doctor dose-ஐ குறைக்கலாம் — ஆனால் இது மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே செய்ய வேண்டும்.
Step 2: Thyroid antibody test (Anti-TPO antibodies) செய்யுங்கள்🧪
பலர் hypothyroidism என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர்களுக்கு autoimmune thyroid problem (Hashimoto’s thyroiditis) இருக்கலாம்.(பயப்படும் அளவுக்கு இது பெரிய நோய் அல்ல, பயப்பட வேண்டாம். இது உடலின் சில செல்கள் தைராய்டை தாக்குவதால் வரக்கூடியது).
ஆனால் anti-TPO antibody test செய்யாததால்அது தெரியாமல் போய்விடுகிறது.
ஆராய்ச்சிகள் கூறுவது போல, 90% hypothyroidism உண்மையில் autoimmune காரணங்களால் தான் ஏற்படுகின்றன.
ref- (PMID 21893493)
மற்றொரு ஆய்வும் இதே கருத்தை ஆதரிக்கிறது — antibody testing இல்லாததால் autoimmune thyroiditis கண்டுபிடிக்கப்படாமல் போகிறது (PMID 22941017).
என்னுடைய சில clients-ல் கூட இதே விஷயம் நடந்தது — நீண்ட நாட்களாக thyroid மருந்து எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு anti-TPO antibody test positive ஆகவந்தது.
இந்த test positive என்றால், கவனம் thyroid-ல் மட்டுமல்ல — gut health (குடல் ஆரோக்கியம்)மீதும் இருக்க வேண்டும்.
Step 3: சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
முழுவதும்தவிர்க்க வேண்டியவை:
- 🍕Gluten (wheat, chappathi, bread, rava போன்றவை)
- 🥛Dairy products (curd & ghee மட்டும் எடுத்துக்கொள்ளலாம்)
சிலவற்றைகுறைத்து முயற்சி செய்யலாம்:
- Red meat
- Soy products
- Cruciferous vegetables (cabbage, broccoli, cauliflower — வாரத்திற்கு ஒருமுறை போதும், அதற்கு மேல் வேண்டாம்)
புதிய ஆய்வுகள் gluten-free diet thyroid inflammation-ஐ குறைக்க உதவலாம் எனச் கூறுகின்றன
ref-(PMID 39239093, PMID 30060266).
Step 4: உங்கள் Gut-ஐ heal செய்யுங்கள்❤️🩹
பெரும்பாலான thyroid பிரச்சனைகளுக்கு காரணம் gut imbalanceஆக இருக்கும்.
இதனை “gut-thyroid axis” என்றுஅழைக்கிறார்கள்
ref- (PMID 38386169).
Gut-ஐ heal செய்ய உதவும் உணவுகள்:
- 🥥Coconut & ghee – நல்லகொழுப்புகள்
- 🥬நார் சத்து நிறைந்த உணவுகள்(High-fibre foods)– oats, காய்கறிகள், seeds, fruits,சுண்டல் மற்றும் பயிரு வகைகள்.
- 🥒Fermented foods – curd, பழைய கஞ்சி, வீட்டில் செய்த ஊறுகாய்
- 💧தண்ணீர் அதிகம் குடிக்கவும்
Step 5: Protein அளவைஅதிகரிக்கவும்🥩🍗
நம்மூர் உணவில் பொதுவாக protein குறைவாக இருக்கும்.
Protein குறைவால் metabolism மெதுவாகி muscle குறையும்.
நாள் ஒன்றுக்கு உங்கள் உடல் எடைக்கு 1g protein எடுத்துக் கொள்ளுங்கள்.
உதாரணம்: 60kg எடை ஆளாக நீங்கள் இருந்தால் 60g protein தேவை.
Protein sources: முட்டை, paneer, lentils, fish, chicken, tofu, sprouts.
Step 6: Exercise – Zone 2 & Strength Training👟
🏃♀️ Zone 2 cardio (45–60 நிமிடங்கள்) – brisk walk, cycling, light jog
🏋️♀️Strength training (வாரத்திற்கு 2–3 நாட்கள்) – muscle வளர்த்தல், metabolism உயர்த்துதல்
Step 7: சாப்பாடு & தூக்கம் – சீக்கிரம்🍴🛌
🍽️ இரவு உணவு 8 மணிக்குள்முடிக்கவும்
🕘தினமும் 7–8 மணி நேரம் நல்லதூக்கம் உறுதிப்படுத்தவும்
இது digestion, energy, metabolism எல்லாவற்றையும்இயற்கையாக மேம்படுத்தும்.
Lifestyle change
Thyroid பிரச்சனைக்கான தீர்வு ஒரு மாத்திரையல்ல — அது உடலை முழுமையாக ஆதரிப்பது.
மெல்ல மெல்ல பழக்கங்களை மாற்றுங்கள், தொடர்ந்து பின்பற்றுங்கள், உங்கள் உடல் மாற்றத்தை உணரும்.
“Thyroid healing is not about stopping medication; it’s about strengthening your system naturally.”
Disclaimer
இந்தபதிவில் கூறியவை கல்வி நோக்கத்திற்காக மட்டுமே.
உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து அல்லது உணவில் மாற்றம் செய்ய வேண்டாம்.
Research References (PMIDs):
21893493, 22941017, 39239093, 30060266, 38386169